கர்நாடகாவில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமுக்கு, புதிய டிரக்கை வாங்கச் சென்ற விவசாயி ஒருவரின் தோற்றம் குறித்து கார் ஷோரூம் விற்பனையாளர் கேலி செய்து, அவமானப்படுத்திய வீடியோ வைரல் ஆனது.
கர்நாடக மாநிலம், ரமணபாளையாவைச் சேர்ந்த விவசாயி கெம்பே கவுடா. கடந்த வெள்ளிக்கிழமை இவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் துமரகுருவில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமுக்கு சென்றுள்ளார். ஷோரூமிற்குள் நுழைந்து அங்கிருந்து கார்களைப் பார்க்கத் தொடங்கினர். ஆனால், ஷோரூமில் இருந்த சில ஊழியர்கள், ``கார் வாங்க ரூ. 10 லட்சம் வேண்டும், உன்னைப் பார்த்தால் 10 ரூபாய் கூட இருக்காது போல உன்னிடம் முதலில் 10 ரூபாய் இருக்கிறதா?" என்று கேலி பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் கோபமடைந்த விவசாயிகள், ``இன்னும் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் கொண்டுவருகிறேன், இன்றே காரை டெலிவரி செய்து விட முடியுமா?" எனச் சவால் விட்டுச் சென்று, அடுத்த ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பியுள்ளார்.
பொதுவாகவே கார் வங்கினால் அதை டெலிவரி செய்ய சில நாள்கள் ஆகும். ஆனால், இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஷோரூம் ஊழியர்கள் உடனே காரை டெலிவரி செய்ய முடியாமல் கையறு நிலையில் நிற்கவே, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் காவல்துறைக்குச் சென்றது. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களும், இந்த சமூகமும் எழுச்சி பெறச் செய்வதே ஆகும். மேலும், தனிநபரின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதுமாகும். இந்த நோக்கத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது மிகவும் அவசரமாகக் கவனிக்கப்படும். இன்னும் ஊழியர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்படும். சம்பவம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்படும்" என உறுதியளித்துள்ளார்.
Also Read: கர்நாடகா: மத மாற்றம் செய்ததாக ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்! -போலீஸ் வழக்கு பதிவு
from தேசிய செய்திகள் https://ift.tt/3qZx66V
0 Comments