தமிழகத்தின் பொங்கல் பண்டிகையைப் போன்று இந்தியாவின் பிற பகுதிகளில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற மகர சங்கராந்தி விழாவில் கலந்து கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள பட்டியலின வகுப்பைச் சார்ந்த ஒருவரின் வீட்டில் உணவருந்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத், பட்டியலினத்தைச் சார்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் உ.பி-யில் சட்டமன்ற தேர்தல் தொடங்கவிருக்கும் நிலையில் ஆளும் பா.ஜ.க-வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பட்டியலினத்தவர் வீட்டில் உணவருந்தியிருப்பது அரசியலில் கவன ஈர்ப்புக்காக செய்வதாக எதிர்க்கட்சிகள் நிர்வாகிகள் விமர்சித்தும் வருகிறார்கள்.
Also Read: அமித் ஷா பிளானை வீழ்த்தும் அகிலேஷ் அட்டாக்! - மிரளும் யோகி | Elangovan Explains
from தேசிய செய்திகள் https://ift.tt/3trAKIf
0 Comments