ஜம்மு-காஷ்மீர்: ``இயல்பு நிலை திரும்பியவுடன் மாநில அந்தஸ்து!” - அமித் ஷா உறுதி

ஜம்மு காஷ்மீர் அடிக்கடி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாவது வழக்கம். சிறப்பு அந்தஸ்து 370 நீக்கியதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் குறித்து பேசி வருகிறார்.

இன்று ஜம்மு காஷ்மீரில் புதிய திட்டத்தை (The District Good Governance Index) தொடங்கி வைத்துப் பேசிய அமித் ஷா, ``ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லை நிர்ணயம் தொடங்கிவிட்டது, விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உறுதி அளித்துள்ளேன். இங்கு இருக்கிற மூன்று குடும்ப கட்சிகளும் அரசியல் லாபத்திற்காகப் பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதனால் தான் இங்கு ஜனநாயகம் அடிமட்டத்தை எட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

இளைஞர்கள் அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம். 370வது பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 40 சதவிகிதம் குறைந்துள்ளது, கொலைகள் 87 சதவிகிதம் குறைந்துள்ளது. 2019-க்கு பிறகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அரசின் திட்டத்தில் மக்கள் நேரடிப் பலன்களைப் பெறுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைக் காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பிறகு, நிலைமை ஓரளவு சீரானதை அடுத்து படிப்படியாகக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

Kashmir

இதனிடையே, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்குள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மாநிலங்களவையில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர். பிரியங்கா சதுர்வேதி, கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ``ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பிய பிறகு அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்’’ என்றார்.

அதை உறுதி செய்யும் விதமாக மீண்டும் சிறப்பு அந்தஸ்த்து வழஙப்படும் என தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிவருகிறார்.

Also Read: மீண்டும் கலவர பூமியாகும் ஜம்மு காஷ்மீர்!



from தேசிய செய்திகள் https://ift.tt/3H7UOUl

Post a Comment

0 Comments