கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்த்ரீ ஒருவர், 2018-ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார். பிஷப் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டும் முதலில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கன்னியாஸ்த்ரீகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிஷப் பிராங்கோ முளய்க்கல் 2018 செப்டம்பர் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர், 2018 அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். மேலும் அனுபமா உள்ளிட்ட கன்னியாஸ்த்ரீகள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.
Also Read: பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்!
2018, 2019-ம் ஆண்டுகளில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 105 நாள் ரகசிய விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்பதற்காக பிஷப் பிராங்கோ முளய்க்கல் காலை 9 மணிக்கு பின்வாசல் வழியாக கோர்ட்டுக்கு வந்தார். பிராங்கோ முளய்க்கலுடன் அவர் சகோதரனும், சகோதரியின் கணவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். தீர்ப்பு கூறுவதைத் தொடர்ந்து கோர்ட் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இன்று காலை நீதிபதி ஜி.கோபகுமார் அளித்த தீர்ப்பில், கன்னியாஸ்த்ரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிஷப் பிராங்கோ முளய்க்கலை விடுவிப்பதாகவும். பிஷம் குற்றம் செய்ததாக தெளிவுபடுத்துவதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாகவும் கூறினார்.
தீர்ப்பு வெளியானபின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பிஷப் பிராங்கோ முளய்க்கல் அழுதபடியே தனக்காக வாதாடிய வழக்கறிஞரை கட்டிப்பிடித்தார். அப்போது பிஷப் பிராங்கோ முளய்க்கலிடம் தீர்ப்புபற்றி கேட்டதற்கு, "தெய்வத்திற்கு ஸ்துதி" என்று மட்டும் கூறிவிட்டு கைகூப்பியபடி காரில் புறபட்டுச் சென்றார்.
Also Read: `ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயன்றார்!' -பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது மற்றொரு பாலியல் புகார்
from தேசிய செய்திகள் https://ift.tt/31XyNbn
0 Comments