மும்பையில் தொடர்ந்து கொரோனா தொற்று தினமும் 20,000 பேருக்கு ஏற்பட்டு வருகிறது. இம்முறை மும்பையில் அதிகளவில் கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இம்மாதத்தில், அதாவது கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதில் இருந்து மும்பையில் மட்டும் 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்குத் தொற்று ஏற்பட்டு இருப்பதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Also Read: Doctor Vikatan: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கொரோனா தொற்றாமல் தப்பிப்பது எப்படி?
மாநகராட்சிக்கு சொந்தமான நாயர் மருத்துவமனையில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அம்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். கொரோனா மூன்றாவது அலையின்போது ஏற்படும் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் விரைவில் குணமடைந்துவிடுவதாகவும், மூன்றாவது அலையால் ஏற்படும் தொற்றின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதாகவும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் கொரோனா தொற்று ஏற்படும் கர்ப்பிணிகளுக்குக் கூடுதல் கவனம் எடுத்துப் பார்த்துக்கொள்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். கர்ப்பிணிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Also Read: Covid Questions: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
மருத்துவர்கள், ``கொரோனா தொற்றின்போது பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதனால் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலையின்போது பெண்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இப்போது அது போன்று இல்லை. அதோடு ஆக்ஸிஜன் சப்போர்ட்டும் தேவைப்படுவதில்லை. மூன்றாவது அலையின் கொரோனா தொற்றின் தாக்கம் லேசாக இருக்கிறது. மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர்" என்று தெரிவிக்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/31ZPaUG
0 Comments