`புல்லி பாய்' மொபைல் ஆப்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, முக்கியத் துறைகளில் இருக்கும் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ஏலம் விடப்படுவதாகக் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்தியிருந்தனர். இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read: ஆப் மூலம் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள்; வழக்கு பதிவு செய்த போலீஸார்; என்ன நடந்தது?
மத்திய அரசும் இதில் தலையிட்டு `புல்லி பாய்' ஆப்பை தடை செய்தது. அதோடு இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதே போன்று ஒரு ஆப் வெளியானது. ஆனால் அப்போது வெறுமனே வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
தற்போது மும்பை போலீஸின் சைபர் பிரிவு `புல்லி பாய்' ஆப் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தது. இந்த ஆப் உருவாக்கியது தொடர்பாக பெங்களூரை சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
உடனே மும்பையிலிருந்து தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து சென்றனர். அவர்கள் 21 வயது பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். மாணவரின் பெயர் விவரங்களை வெளியிட மறுத்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Also Read: பிரசவத்திற்குப் பின் ஹார்மோன் மாற்றத்தால் பெரிதாகும் மூக்கு? மருத்துவர் சொல்வது என்ன?
`புல்லி பாய்' ஆப் உருவாக்கியதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1-ம் தேதி `புல்லி பாய்' ஆப் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள்
0 Comments