கேரள மாநில அரசு சார்பில் அம்மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணப்பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு என ஒவ்வொரு விழாகாலங்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முறை லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெறும்போதும் எதாவது ஒரு ஆச்சர்யம் அரங்கேறும். கடந்தமுறை ஓணம் பம்பர் பரிசு 12 கோடி ரூபாய் தனக்கு விழுந்ததாக துபாயில் வேலை செய்யும் நபர் ஒருவர் அறிவித்தார். தனக்காக நண்பர் ஒருவர் லாட்டரி சீட்டு எடுத்து வைத்திருந்ததாகவும், அந்த எண்ணுக்கு 12 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகவும் கூறியதுடன் நண்பர்களுடன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார்.
ஆனால், நண்பர்கள் அவரை ஏமாற்றியதாக பிறகு தெரியவந்தது. அந்த 12 கோடி ரூபாய் பரிசு ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு லாட்டரி குலுக்கலிலும் சுவரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் மற்றும் ஆங்கில புத்தாண்டு லாட்டரி விற்பனையில் கடந்த சில மாதங்களாக கேரள அரசு ஈடுபட்டுவந்தது. பம்பர் பரிசு 12 கோடி ரூபாய், இரண்டாம் பரிசு மூன்று கோடி ரூபாய். என அறிவிக்கப்பட்டது. ஒரு டிக்கெட் விலை 300 ரூபாய் என்ற கணக்கில் முதலில் 24 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அந்த டிக்கெட்டுக்கள் அனைத்து விற்றுதீர்ந்ததால், மேலும் ஒன்பது லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவையும் விற்று தீர்ந்ததைத் தொடர்ந்து சுமார் மூன்று லட்சம் அளவில் மேலும் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டிருந்தன.
Also Read: `இல்லீகலாதானே சம்பாதிக்குறே, ரூ.25 லட்சம் கொடு!' - லாட்டரி மாஃபியாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்
லாட்டரி சீட்டு பரிசுக்கான குலுக்கல் கடந்த 16-ம் தேதி மதியத்துக்கு மேல் நடைபெற்றது. அதில் கோட்டயம் குடயம்படியைச் சேர்ந்த பெயின்டிங் தொழிலாளி சதானந்தன் என்பவருக்கு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், லாட்டரி குலுக்கல் நடைபெற்ற 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்குச் சென்ற பெயின்டிங் தொழிலாளி சதானந்தன் ஒரு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டுக்குத்தான் 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்திருக்கிறது. சிறிய வீட்டில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இதுபற்றி சதானந்தன் கூறும்போது, ``நான் 50 ஆண்டுகளாக பெயின்டிங் வேலை செய்துவருகிறேன். ஒருநாள் ஒன்றரை ரூபாய் கூலி இருக்கும்போதே பெயின்டிங் வேலையில் இறங்கினேன். ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்க 500 ரூபாய் கொண்டு சென்றேன். அதில் 300 ரூபாய்க்கு லாட்டரி எடுத்தேன். அந்த சீட்டுக்க 12 கோடி ரூபாய் விழுந்தது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ச்சியாக லாட்டரி சீட்டு வாங்கும் வழக்கம் எனக்கு இல்லை. அவ்வப்போது லாட்டரி வாங்குவேன். 1000, 2000 என அவ்வப்போது பரிசு விழும். இப்போதுதான் பம்பர் பரிசு விழுந்திருக்கிறது. தெய்வத்துக்கு நன்றி. எனக்கு நிறைய கடன் உள்ளது, அந்த கடன்களை அடைக்க வேண்டும். என் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக எதாவது செய்யவேண்டும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3KwxD8e
0 Comments