ஒமைக்ரான் பாதிப்பு: உ.பி, ம.பி-யில் இரவுநேர ஊரடங்கு அமல்; மகாராஷ்டிராவில் நிலைமை என்ன?!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதாக அந்த மாநில அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 122 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருமணம் போன்ற நிகழ்வுகளிலும், சமூக கூட்டங்களிலும் 200 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதேபோல, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஒமைக்ரான்

அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 88 பேருக்கும்,டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 31 பேருக்கும் , குஜராத்தில் 30 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறார். தேவைப்பட்டால் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தைப் போலவே, மத்தியப் பிரதேச மாநிலத்திலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் அவசர தேவைக்காக மட்டுமே இரவு நேரங்களில் வெளியில் வரவேண்டுமென்று அந்த மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கும் ஊரடங்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Doctor Vikatan: தடுப்பூசி செலுத்தி, கொரோனா டெஸ்ட் செய்த பயணிகளின் மூலம் ஒமைக்ரான் எப்படி பரவுகிறது?



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments