மும்பை சாக்கி நாக்கா பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், சுற்றுலாவுக்காக மும்பை அருகிலிருக்கும் கடற்கரை நகரமான அலிபாக்குக்கு சென்றனர். அலிபாக்கில் பாராசூட் பயணம் மிகவும் பிரபலமாகும். பாராசூட் கயிற்றை படகில் கட்டிக்கொண்டு பாராசூட் பறக்கவிடப்படும். அந்த வகையில், அந்தப் பெண்களும் பாராசூட் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற பாராசூட்டின் கயிற்றை படகிலிருந்தவர்கள் படிப்படியாக விட்டனர். பாராசூட் வேகமாக மேலே சென்றது. அபோது, திடீர் பழுது காரணமாக பாராசூட் மேலே செல்லாமல் அப்படியே கடல் மட்டத்தில் நின்றது. அதில் இருந்த இரண்டு பெண்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு படகில் இருந்த கயிறு லூசாக, பாராசூட் மேலே சென்றது. அதில் இருந்த பெண்களும் உற்சாகமாக பாராசூட்டில் வானில் மிதந்து கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக பாராசூட்டை படகுடன் இணைத்த கயிறு திடீரென அறுந்தது. இதனால் இரண்டு பெண்களும் 100 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்தனர். அவர்கள் இருவரும் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் அவர்கள் கடலில் மிதந்து கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு இரண்டு பெண்களையும் மீட்டனர்.
இச்சம்பவத்தால் இரு பெண்களும் நூலிழையில் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரத்தில் இது போன்று நடப்பது இது இரண்டாவது முறையாகும். நவம்பர் மாதம் குஜராத் அருகில் உள்ள தாமன் கடற்கரை பகுதியில் அஜித் என்பவரும் அவரின் மனைவி சரளா ஆகியோர் பாராசூட்டில் சென்ற போது படகில் இருந்த கயிறு அறுந்து பாராசூட்டில் இருந்த இருவரும் கடலில் விழுந்தனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் படகு உரிமையாளர்கள் பாராசூட் சுற்றுப்பயணத்தை நடத்தை ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
from தேசிய செய்திகள்
0 Comments