
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவன், மாணவி வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மாணவி சங்கவி. இவர், அண்மையில் நடந்த நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 202 மதிப்பெண் பெற்று மருத்துவப்படிப்பு பயில தகுதி பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, மடிக்கணினியை பரிசாக அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments