முதியவர்கள் - மன நலம் பாதித்தவர்களை: தேடிப்பிடித்து மீட்டுவரும் காவல் கரங்கள் உதவி மையம்

சென்னையில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்டறிந்து மீட்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ‘காவல் கரங்கள்’ என்ற பெயரில் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த உதவி மையம் மேரிரஜு என்ற பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் சென்னையில் இயங்கி வருகிறது.

‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் மீட்கப்படுபவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படுவதுடன் அரசு மற்றும் அரசு சாரா காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களுடைய முகவரியை கண்டறிந்து குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் பணிகளையும் ‘காவல் கரங்கள்’ செய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments