50 ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு: ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் சரியும் அபாயம்

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் சரியும் அபாயத்தில் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கோமுகிமற்றும் மணிமுக்தா அணை நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த 3 தினங்களாக பெய்த இடைவிடாத மழையால் மணிமுக்தா அணைக்கு வினாடிக்கு 2,579 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளது. எனவே அணையில் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து 3,609 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments