
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்தவரை சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்தியகடலோரக் காவல் படையினர் சோதனை செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். படகில்இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WQNnPd
0 Comments