மாறியுள்ள அரசியல் சூழலை சாதகமாக்கி டெண்டர் ஒதுக்கீடு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி களில் பல்வேறு பணிகளுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரியான பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாக்கல் செய்த அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என தெரிவித்து இருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அப்போதைய அதிமுக அரசும் அந்த வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments