அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் என்பதால் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர மற்ற நாட்களிலும் தடுப்பூசி அதிகளவில் செலுத்தவதை உறுதிப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுபடுத்த, நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்தும் செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும். பண்டிகை நாட்களில் கரோனாபரவதலை தடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம

Post a Comment

0 Comments