பல ஆயிரம் வருடங்களுக்கு மூன் சித்தர்கள் கூறிய நமது தலையெழுத்தை


*மாற்றி நமக்கு புது வாழ்வு ஏற்படுத்தி தரும் பிச்சை எடுக்கும் சூட்சுமமும்,பிச்சை இடும் பரிகாரமும்:  

ஒருவர் தன் வாழ்க்கையில் கர்மா என்ற விதிப்படி  பல அடுக்கடுக்காக துன்பங்கள் மற்றும் பேரிழப்புகளை சந்தித்து வாழ்க்கையே வேண்டாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் தருவாயில் தான் யாரென்றே தெரியாத ஒரு ஊரில் சென்று அனைத்து உறவுகளையும் மறந்து முன்று நாட்கள் வெறும் பிச்சை மட்டுமே எடுத்து உண்டு வாழ்ந்து விட்டால் அவன் விதியின்படி  தலையெழுத்தே மாறி அவனுக்கு புது வாழ்வு ஏற்படும்.

இதற்கு மிகபெரிய உதரணமாக பட்டினத்தார் சுவாமிகள் வரலாறு அமைந்துள்ளது.

பட்டினத்தார் மிகபெரிய செல்வந்தர்.ஒரு கட்டத்தில் அனைத்தும் துறந்து முக்தி பெற்று சிவனை கண்டார்.

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியின்படி குஜராத்தில் உள்ள ஒரு செல்வந்தர் காசிக்கு சென்று 9 நாட்கள் பிச்சை எடுத்து இறைவனிடம்  வாழ்வு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோடீஸ்வரன் ஒரு பிச்சைகாரனை போன்று பிச்சை எடுத்து தனது தாயின் உயிரை காப்பறுவதாக அமைக்கபட்ட திரைகதை சித்தர்கள கூறிய சூட்சுமத்தை பின்னனியாக வைத்து உருவாக்கபட்டு அந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிவீர்கள்.

இதே போன்று பல கோவில்களில்
பெண்கள் தனது தாலிபாக்கியத்திற்காக மடிப்பிச்சை எடுப்பதும்,புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடரமணா,கோவிந்தா என்று சொல்லிகொண்டு வீடு வீடாக சென்று அரிசி பிச்சை எடுப்பதும் 
சித்தர்கள கூறிய சூட்சுமத்தின் அடிப்படையாக கொண்டதுதான்.

ஒரு சித்தர் நினைத்தால் உங்கள்வாழ்க்கையே மாற்றலாம்..
ஆகையால் சித்தர்கள்,குருமார்கள் மற்றும் மகான்களை எங்கு பார்த்தாலும் அவர்களிடம் சென்று ஆசி வாங்குங்கள்... 

ஒம் நமசிவாய!

கர்மவினைகளை குறைத்து,நமது தலை எழுத்தையே மாற்ற கூடிய சக்தி வாய்ந்த சித்தர்கள கூறிய பரிகாரம்:

நண்பர்களே இதை அவசியம் கடைபிடியுங்கள்.

உங்களிடம் மிகவும் வயதான கூன் வளைந்த முதியவர்கள் ஆணோ, பெண்ணோ யாராவது உதவி அல்லது பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள் .

உங்களால்  என்ன முடியுமோ, ஒரு ருபாய் இருந்தாலும் தானமாக தந்து விடுங்கள்.. 

நாம் வணங்கும் இறைவன் இந்த ரூபத்தில் தான் வந்து பிச்சை கேட்டு பார்ப்பார்களாம்.

 நாம் தரும் தானம் அவர்களிடம் சேர்ந்த அடுத்த நிமிடமே உங்கள் கர்மவினைகள் குறைந்து உங்கள் தலையெழுத்தே மாற்ற கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இந்த பரிகாரம் சித்தர்கள் அகராதியில் கூறப்படுகின்றது..

*நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவு, பொருள், உடை என தானம் செய்யுங்கள்.  உங்களின் தானம் உங்களின் குடும்ப முன்னேற ஊன்றுகோளாக அமையும்..,




Post a Comment

0 Comments