சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்து, ரூபாய் 24.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் 1250 மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு  24 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் 

பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்க்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல் 


மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் முகாமிலேயோ சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும் , தொடர் சிக்கிசை தேவைப்படின், நோயின் தன்மையைப் பொறுத்து எந்த மருத்துவமனைக்கு சிக்கிசை பெற செல்ல வேண்டும் என்ற விபரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும்

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் 

Post a Comment

0 Comments