
ராமசாமி படையாட்சியாரின்104-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பில் அமைச்சர்களும், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 104-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகஅரசு சார்பில், சென்னை கிண்டிஹால்டா சந்திப்பில் உள்ள அவரதுசிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு, அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Cp7fZ3
0 Comments