ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் வரம்புகளை மீறி பணி நேரங்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதும் அதனை சோசியல் மீடியாக்களிலும் பகிர்வதும் அண்மைக்காலமாகத் தொடர்ந்து வருகின்றன.
அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தின் வட்டாட்சியர் ஜமுனா ராணி, அண்மையில் ஆய்வு பணிகளுக்காக கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்.
தாசில்தாருக்கான அரசு வாகனத்தில் சென்ற அவர், நடுவழியில் சாலையில் வாகனத்தை நிறுத்தி கடம்பூர் மலை அழகைக் கண்டு ரசித்திருக்கிறார். அதோடு நிற்காமல் 'ஜவ்வாது பெண்ணானது' என்கிற சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார்.

'மாவட்டத்தில் ஆட்சியருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய வட்டாட்சியர் ஒருவர் பணி நேரத்தில் வரம்புகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு உயர் அதிகாரிகள் முறையாக நெறிமுறைப்படுத்த வேண்டும்' எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
'அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே' என கமெண்ட்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .
from India News https://ift.tt/hdj6mVM
0 Comments