’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பது அவரது எண்ணம். எல்லோரும்  எல்லாமும் பெற வேண்டும் என்பது அவரது நோக்கம். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பது அவரது கனவு. மக்கள் எல்லோரும் எல்லா நலன்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டங்களை தொடர்ந்து அறிவித்துக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும்  தங்கள் துறையில் சிறந்த பணிகளை ஆற்றிட  வேண்டும் என்ற எண்ணத்தை முதல்வர் சொல்லி இருக்கின்றார்.

காய்கின்ற மரத்துக்கு கல்லடி விழும். ஆ. ராசா இன்றைக்கு அல்ல, என்றைக்குமே ஏதாவது ஒரு வார்த்தையை வீசிவிட்டு வருந்துவார். மக்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருடைய எண்ணங்கள் தூய்மையாக இல்லை என்பதுதான் அந்த கருத்தின் அடிப்படையில் தெரிகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை. மக்களுக்கு இரவு பகலாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்” என்றார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

நிதித்துறையில் இருந்து வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டது குறித்த  கேள்விக்கு, “இந்த கேள்வியை நீங்கள் கேட்க கூடும் என தெரியும். மக்களோடு மக்களாக இருந்து பணிகளை ஆற்ற வேண்டும் என விரும்புகின்றேன். நிதித் துறையை பொறுத்தவரை என்னுடைய பணிகள் முழுமையாக சென்னையில் இருந்து ஆற்ற வேண்டிய சூழல் ஏற்படும். மக்கள் பணி என்பது வருவாய்த்துறை மூலமாக எல்லா நலத்திட்ட பணிகளையும் உருவாக்க முடியும் என்பதால் என்னுடைய நிலையில், முதல்வரிடம் வேண்டுகோள் வைத்தேன். அந்த வேண்டுகோள் அடிப்படையில் தான் வருவாய்த்துறை அமைச்சராக இன்று வந்திருக்கிறேன்” என பதிலளித்தார்.

நிதிச் சுமை அதிகமாக இருப்பதால் இந்த பொறுப்பு வேண்டாம் என சொன்னதாக கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு, “நீங்கள்  சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. உங்களை மாதிரி தோன்றும் ஒவ்வொரு கருத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது. என்னுடைய உள்ளத்தில் இருப்பதை அவரிடம் சொன்னேன். அவர் அதை மாற்றிக் கொடுத்திருக்கிறார்” என பதிலளித்தார்.

 பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தி இருப்பது குறித்த கேள்விக்கு, “பாரத பிரதமர் அளவிற்கெல்லாம் போகாதீர்கள். அவ்வளவு தூரத்துக்கு எல்லாம் போக வேண்டாம். குழந்தைகள், குடும்பத்தினரை அழைத்து கொண்டு காரில் போவதில்லையா? பஸ்ஸில் போவது இல்லையா? இதற்கெல்லாம் பதில் சொல்வது சரியாக இருக்காது. எங்கேயோ ஒரு முடிச்சை போட வேண்டும், சிக்கலை போட வேண்டும் என கருதுகிறீர்கள். அதற்கு சிக்கக்கூடியவன் செங்கோட்டை அல்ல” என்றார்.



from India News https://ift.tt/LDbW57g

Post a Comment

0 Comments