Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் - காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்பால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - அமெரிக்க அரசுகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த ட்விட்டர் பதிவில், "எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்புடன் பேசினேன். வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி திட்டத்துக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். வரவிருக்கும் வாரங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்." எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரத்தில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

காசா

ட்ரம்ப் வழிகாட்டுதலின்படி பணயக்கைதிகளை ஒப்படைக்கும் முறையை உருவாக்குவதில் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போரைத் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முன்னேற்றம் அமைதியைக் கோருவோருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது.



from India News https://ift.tt/CGJdv02

Post a Comment

0 Comments