Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 20 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் 'Diethylene Glycol (DEG)', 'Ethylene Glycol (EG)' நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.

கோல்ட்ரிஃப் (Coldrif)
கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 'Sresan Pharmaceuticals' என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல் மருந்துதான் என்று அந்நிறுவனத்தில் விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது.

இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியம், 'இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்தைப் பயன்படுத்த வேண்டாம். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம்
கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம்

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ''Sresan Pharmaceuticals' மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மத்தியப் பிரதேச அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நடத்திய இந்த காவல் விசாரணையிலும், மருந்துகளின் சாம்பிள்களை எடுத்து ஆய்வு செய்து நச்சுத் தன்மை இருப்பதை உறுதி செய்தும் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.



from India News https://ift.tt/MI8P6rG

Post a Comment

0 Comments