கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

விஜய் கரூர் பிரசாரத்திற்கு 8 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தினால் மக்கள் தண்ணீர் இன்றி சோர்வடைந்து 41 பேர் உயிரிழந்துள்ளனர். தவெகவினர்தான் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என யோசித்து இருக்க வேண்டும். கட்சியினருக்கு அரசியல் அனுபவம் இல்லை.

கட்சி கட்டமைப்பை முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும். கட்டமைப்பு இல்லாததால் இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். திமுகவில் எம்ஜிஆர் தேர்தல் பிரசாரம் போகும் போது பின்னாலேயே சென்றுள்ளேன்.

பெரிய கூட்டம் 2 பக்கமும் ரோட்டில் விடிய விடிய படுத்து இருப்பார்கள். வேனின் மேலே ஏறி நின்று இரண்டு பக்கமும் கைகாட்டியபடியே செல்வார்.

vijay
vijay

கீழே விழுந்தார்கள் இறந்தார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சென்றார். அவர் லட்சக்கணக்கான மக்களை ஏற்கனவே சந்தித்திருந்தார். அதுபோன்ற அனுபவம் விஜய்க்கு இல்லை. அதனால் இப்படிப்பட்ட துக்க நிகழ்வு நடந்திருக்கிறது.

கரூர் வந்த விஜய் ’காவல்துறையினரின் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் இந்தக் கூட்டத்திற்கு எங்களால் வந்து அடைய முடியாது. இவ்வளவு பாதுகாப்பாக அழைத்து வந்த காவல் துறையினருக்கு நன்றி சல்யூட். காவல்துறையினர்தான் எங்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்' என்று கூறியுள்ளார். இப்போது புதிதாக குற்றம் சொல்வதற்காகக் கூறி வருகின்றனர்” என்றார்



from India News https://ift.tt/3eCWdQ5

Post a Comment

0 Comments