அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
"இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்து வருகிறது தான். ஆனால், இதைத் தவிர, வேறெந்த நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை.
உலக அளவில் இருக்கும் சூழலால், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. அதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைகிறது.
இது இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் விஷயத்தில் மட்டும் இல்லாமல், பிற நாடுகளின் நாணயங்களுக்கும் அமெரிக்க டாலர் விஷயத்தில் அதே நிலை ஏற்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி வரி மாற்றம்
ஜி.எஸ்.டி மாற்றம் குறித்து கேட்கப்பட்ட போது, "இந்த ஜி.எஸ்.டி வரி மாற்றம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் பயனடையச் செய்யும், நுகர்வுகளை அதிகரிக்கும் மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்
சில தொழில்துறைகள் ஏற்கெனவே தங்களது பொருள்களின் விலை குறைப்பை அறிவித்திருக்கின்றன. இருந்தாலும், ஜி.எஸ்.டி வரி விகிதக் குறைப்பு, விலை குறைவாக மாறி மக்களைச் சென்றடைகிறதா என்பதை தனிப்பட்ட முறையில் நானே கண்காணிப்பேன்.
இந்தியாவில் உள்ள அனைவரும் ஜி.எஸ்.டி கட்டி வருகின்றனர். மிக மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒருவர் கூட, சிறிய பொருள்கள் வாங்கும்போது ஜி.எஸ்.டி கட்டுகிறார்கள். அதனால், இந்த வரி மாற்றம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களையும் சென்றடையும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
from India News https://ift.tt/1JLGPcp
0 Comments