ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளுக்காக இந்தியா மீது 50 சதவிகித வரியையும், அபராதத்தையும் விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன பேசினார்?
இப்படி ட்ரம்ப் வரிகளைக் காட்டியும், விதித்தும் உலக நாடுகளைப் பயமுறுத்தி வருகிறார். இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரேசில் அதிபரின் தலைமை ஆலோசகர் செல்சோ அமொரிம் கடந்த 6-ம் தேதி போன்கால் பேசியுள்ளனர்.
அப்போது வாங் யி, "பிற நாடுகளைக் கட்டுப்படுத்த வரியை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா சாசனம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் சட்டங்களை மீறுவது ஆகும்.
மேலும், இது நியாயமற்றது மற்றும் நீண்ட காலத்திற்கு இது பயனளிக்காது" என்று கூறியுள்ளார்.
இந்திய சீன தூதரின் பதிவு
இதை ரீ-ட்வீட் செய்து, இந்தியாவின் சீன தூதர் சு ஃபெய்ஹாங்,
``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்" (Give the bully an inch, he will take a mile) என்று பதிவிட்டுள்ளார்.
சு ஃபெய்ஹாங் நேரடியாக ட்ரம்பை குறிப்பிடவில்லை.
பிரேசில் அதிபர் நேற்று பிரதமர் மோடியிடம் இந்த வரி குறித்து பேசியிருந்த நிலையில், சீனாவும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது.
மேலும், இந்த மாதம் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தியா வர உள்ளார்.
Give the bully an inch, he will take a mile. pic.twitter.com/IMdIM9u1nd
— Xu Feihong (@China_Amb_India) August 7, 2025
from India News https://ift.tt/5xlevNn
0 Comments