ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது என்று அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது.
இருந்தும், இந்தியா ரஷ்யா உடனான வணிகத்தை கைவிடுவதாக இல்லை.
ரஷ்யா உடன் இந்தியா வணிகம் ஏன்?
காரணம், 2022-ம் ஆண்டு, ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் மீது கடும் வரிகளை அறிவித்தது. இதனால், கடும் பொருளாதார சிக்கலில் ரஷ்யா சிக்கிக்கொண்டது.
இதில் இருந்து தப்பிக்க, பிற நாடுகளை விட, குறைவான விலைக்கு ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 85 சதவிகிதத்திற்கு மேல், எண்ணெய் இறக்குமதிக்கு பிற நாடுகளைச் சார்ந்தே இருக்கிறது. ஆக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கத் தொடங்கியது.
மோடி - புதின்
கடந்த 15-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது. ஒருவேளை, இந்தச் சந்திப்பில், போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டிருந்தால், இந்தியா மீதான 50 சதவிகித வரி, 25 சதவிகித வரியாக குறைந்திருக்கும். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
ஆனாலும், இந்தியாவை ரஷ்யா விட்டுக்கொடுப்பதாக இல்லை. ரஷ்யாவையும் இந்தியா விட்டுக்கொடுப்பதாக இல்லை.
இந்த ஆண்டின் இறுதியில் புதின் இந்தியா வர இருக்கிறார். மேலும் ட்ரம்ப் - புதின் சந்திப்பு முடிந்ததும், இந்தியப் பிரதமர் மோடியிடம் அது குறித்து பகிர்ந்துகொண்டார் புதின்.
புதினை சந்தித்த ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது ரஷ்ய பயணத்தில் இருக்கிறார். நேற்று புதினைச் சந்தித்து இருக்கிறார் ஜெய்சங்கர்.
இது இந்தியா - ரஷ்யா உறவை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல,உலகிற்கே பறைசாற்றும் விதமாக இருக்கிறது.
முக்கியமாக, ரஷ்ய பயணத்தில், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்ய அறிவுறுத்தி உள்ளார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
from India News https://ift.tt/2fivRlj
0 Comments