79th Independence Day: "அணு ஆயுத மிரட்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!" - செங்கோட்டையில் மோடி

"அணு ஆயுத மிரட்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது" - மோடி

"ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள் எதிரியின் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் பதிலளித்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொன்றனர். முழு தேசமும் கோபமடைந்தது. பாகிஸ்தானில் நமது ஆயுதப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இனியும் அது பொறுத்துக்கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப்படைகள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி பதிலடி கொடுக்கும். பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்."

"ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக செல்ல முடியாது" - மோடி

79th Independence Day - மோடி
79th Independence Day - மோடி

"சிந்து நதி நீர் ஒப்பந்தம் நியாயமற்றது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். சிந்து நதியிலிருந்து வரும் நீர் எதிரிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. அதே நேரத்தில் நமது சொந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக நமது விவசாயிகளுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம் என்ன? இந்தியாவின் தண்ணீர் எதிரிகளின் விளைநிலத்துக்கு பயன்படுத்த முடியாது. கடந்த பல ஆண்டுகளாக நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் விவசாயிகளுக்கே. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக செல்ல முடியாது."

"78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது" - மோடி

"சுதந்திர தினம் என்பது நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் திருவிழா. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்தன. சவால்களும் பெரியவை. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது. 79-வது சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. இன்று சிறப்பு வாய்ந்த நாள் ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் இன்று கொண்டாடுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்பிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் பெரிய மனிதர் அவர். பிரிவு 370 நீக்கியதன் மூலம், ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை உணர்ந்தபோது டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்."

செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதையை செலுத்திய பிரதமர் மோடி, அதைத்தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், உரையாற்றத் தொடங்கினார்.

"நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம்" - பிரதமர் மோடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/F5UpxSq

Post a Comment

0 Comments