Iran: `ஈரானில் ஆட்சி மாற்றம் வருகிறதா?' - ட்ரம்ப் குறிப்பிட்ட `MIGA' அர்த்தம் என்ன?

நேற்று முன்தினம், யாரும் எதிர்பார்க்காத விதமாக, அமெரிக்கா ஈரானின் (Iran) அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. இது இஸ்ரேலுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை அடுத்து, 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டுவர நினைக்கிறாரா?' என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்தக் கேள்விக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட ட்ரம்ப் அரசில் இருக்கும் பலர் மறுப்பு தெரிவித்தனர்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "அரசியல் ரீதியாக, `ஆட்சி மாற்றம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. ஆனால், இப்போது ஈரானில் இருக்கும் ஆட்சியால், 'ஈரானை மீண்டும் சிறப்பானதாக மாற்ற முடியவில்லை' என்றால், ஏன் ஆட்சி மாற்றம் இருக்கக்கூடாது? MIGA!!!" என்று பதிவிட்டுள்ளார்.

அவர் MIGA என்று குறிப்பிடுவது 'Make Iran Great Again'. ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' என்ற கோஷத்தை முன்னெடுத்து தான் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரில், 'இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பங்குக்கொள்ளும்... பங்குக்கொள்ளாமலும் போகும்' என்று ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். ஆனால், திடீரென்று தனது ராணுவத்தை ஈரானில் களமிறக்கினார். 'அந்த மாதிரியான ஒன்றாக இது இருக்குமோ?' என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.



from India News https://ift.tt/BLHieO3

Post a Comment

0 Comments