`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை இந்த பேரணிக்கு மாநகர காவல் துறை அனுமதி கொடுத்துள்ளது.

அதேநேரம், பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இந்த பேரணியை நடத்த வேண்டும். சாலையின் குறுக்கே மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது. வேண்டுமானால் சிறிய அளவில் மேடை அமைத்துக் கொள்ளலாம் என்ற கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

trichy

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இந்த பேரணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்களை தூவி வரவேற்க திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.

ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டார்.

ஆனால், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகரில் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் பேரணியில் ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ அனுமதி கொடுக்க முடியாது என மாவட்ட ஆட்சியருக்கு பதில் கடிதம் கொடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் பேரணியில் ஹெலிகாப்டரை வைத்து மலர் தூவ அனுமதி கேட்ட விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.



from India News https://ift.tt/UpXhoGz

Post a Comment

0 Comments