``Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு" - சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று.

நாதக'வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருக்கும் சீமான், "சீமான் 'கள்' விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? என்று கேட்க தோன்றுகிறது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை?; தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு சாராய ஆலை கணக்கில்லாமல் உள்ளதுதான் காரணம்.

கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்

முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு

தைப்பூசத்திற்கு முருகனுக்கு தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதைச் செய்யமாட்டார். ஏனென்றால் அவரின் தாய்மொழி அது அல்ல.

அவர் கோயிலில் வேறுமொழியில் குடமுழுக்குச் செய்தால் நான் அங்கேயே ஒருஇடத்தில் தமிழில் குடமுழுக்குச் செய்வேன். என் முப்பாட்டன் முருகன் பேரனுக்காக இறங்கி வருகிறானா, இல்லை ஊரானுக்காக இறங்கி வருகிறானா என்று பார்ப்போம்.

கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்

ஆடு, மாடுகளுக்கு மாநாடு

ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடமில்லாமல் போய்விட்டது. வனப் பாதுகாப்புச் சட்டம் என்று மலைகளில் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்குத் தடைபோடுகிறார்கள். ஆனால், குவாரி என்ற பெயரில் மலைகளை வெட்டி விற்கிறார்கள். அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிய அடுத்ததாக ஆடு, மாடுகளுக்கு ஒரு மாநாடு, போராட்டம் நடத்தப்போகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/EjFaK0U

Post a Comment

0 Comments