Trump : 'தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' - அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் படங்களுக்கு 100% வரி

'அமெரிக்காவின் உற்பத்தியை ஊக்குவிக்கிறேன்...', 'அமெரிக்காவின் பொருட்களை ஊக்குவிக்கிறேன்...' போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' பிரசார வரிசையில், 'அமெரிக்கப் படங்களும்' தற்போது இடம்பெற்று விட்டன.

நேற்று ட்ரம்ப் அமெரிக்காவில் திரையிடப்படும் அமெரிக்காவில் தயாரிக்கப்படாத படங்களுக்கு 100 சதவிகித வரி விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "அமெரிக்காவின் திரைத்துறை வேகமாக இறந்து வருகிறது. பிற நாடுகள் நமது படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டூடியோக்களையும் அமெரிக்காவில் இருந்து கொண்டு செல்ல அனைத்து விதமான சலுகைகளையும் தருகின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் மற்றும் பிற பகுதிகள் பெரிதாக அழிந்து வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் நம் தேசத்திற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும், இது ஒரு வகை பிரசாரம் ஆகும். அதனால், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டிற்குள் வரும் படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பை உடனடியாக தொடங்குமாறு வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவிடுகிறேன்.

அமெரிக்காவில் மீண்டும் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/JCnzTZg

Post a Comment

0 Comments