Neet: ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் தேர்வு எழுத மறுப்பு.. உடனே பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான  நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறும்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவியின் ஆடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கின்றனர்.

தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அழுதிருக்கிறார்.

 இதையடுத்து  அங்குப்  பாதுகாப்பு பணியில் இருந்த மணிமேகலை என்ற பெண் போலீஸ் மாணவியை தனது டூவீலரில் அழைத்துச் சென்று புதிய ஆடை வாங்கி கொடுத்து தேர்வு எழுத அனுப்பி வைத்திருக்கிறார். 

இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பலரும் அந்த பெண் போலீஸைப் பாராட்டி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/G9IvApw

Post a Comment

0 Comments