"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் என்ன சொல்கிறார்?

மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாட்டில் முதன்மையான பிரச்னை தேசிய உணர்வு. நமது நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடிய ராணுவ வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரைப் பாராட்டும் விதமாக மூவர்ணக் கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

விஜய்
விஜய்

திருச்சி, மதுரை, திருப்பூர் என நடக்கும் யாத்திரையைத் தொடர்ந்து சட்டமன்றத் தொகுதி வாரியாக யாத்திரையும் நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி படமும் தேசியக்கொடி மட்டுமே பங்குபெறும். இன்று மதுரை மேற்கு, கிழக்கு, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஈ.டி என்பது தனிப்பட்ட அமைப்பு. அது தேவையில்லாமல் ரெய்டு நடத்தாது. புகார்கள் இருந்தால் ரெய்டு குறித்த ஆலோசிப்பார்கள்.

தமிழக அமைச்சர்களின் வீடுகளில் நடந்த ரெய்டு பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. எதனால் இந்த ரெய்டு நடைபெறுகிறது எனத் தெரிந்த பின்பு பதில் கூறுகிறேன்.

தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணியில் பங்கு பெறுவது அவருடைய விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இதுவே எனது விருப்பம். நாட்டு மக்கள் நலன் கருதி அக்கட்சித் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள். தேர்தல் கூட்டணி குறித்து உங்களுக்குச் சொல்கிறேன்.

தமிழகத்தில் 2031-லும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது.

அதைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் மக்கள்தான். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் சம அளவில் போட்டியிட்டபோது யார் முதலமைச்சர் என்பது கேள்வியாக இருந்தது.

திமுகவா, காங்கிரசா என்ற நிலை ஏற்பட்டபோது எம்ஜிஆரை முதலமைச்சராக மக்கள் தேர்வு செய்தனர்" என்றவரிடம்,

எடப்பாடி, ஓபிஎஸ் 

'அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்கள் குறித்துப் பேசியது' குறித்த கேள்விக்கு, "இந்திய நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது. அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு" என்றார்.

தேசிய கல்விக் கொள்கை திட்டம் குறித்துப் பேசும்போது, "ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மலையாளம், கன்னடம் என எந்த மொழியாகவும் இருக்கலாம்.

அதன் மூலம் அந்த மொழியின் கலாசாரம், பண்பாடு, அறிவியலைத் தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

"அமித்ஷா சென்னைக்கு வந்தது வேறு நிகழ்வுக்காக, அதனால் அன்று ஓபிஎஸ்-ஸைச் சந்திக்க முடியவில்லை. ஆனாலும், இபிஎஸ்-ஸும், ஓபிஎஸ்-ஸும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளனர்.

அதிமுக குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அது குறித்து ஏதும் பேச வேண்டாம். தற்போதைய நிலையில் பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ளார். அதை மட்டுமே பேச முடியும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/vnQqabg

Post a Comment

0 Comments