ஜெர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் கொக்கைன் பயன்படுத்தினார்களா? - உண்மை என்ன?

உக்ரைனுக்கு ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் ரயிலில் பயணம் சென்றபோது கோகோயின் எடுத்துக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

இது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ``ஒரு பிரெஞ்சுக்காரர், ஒரு ஆங்கிலேயர், ஒரு ஜெர்மானியர் ஒரு ரயிலில் ஏறி ஒரு வகையிலான தவறுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.'' என மறைமுகமாக சாடினார்.

வைரலான புகைப்படம்
வைரலான புகைப்படம்

இந்த நிலையில், இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``இந்தப் போலிச் செய்தி பிரான்சின் எதிரிகளால், வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பரப்பப்படுகிறது. பொய்ச் செய்திகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்'' எனப் பதிவிட்டிருக்கிறது.

இது தொடர்பாக இங்கிலாந்து வெளியிட்ட செய்தி அறிக்கையில், ரயிலில் மேசை மீது இருந்த கைக்குட்டையை கொக்கைன் எனத் தவறாக சித்தரிக்கிறார்கள். இந்தச் செய்தியை ரஷ்ய ஆதரவு ஊடகங்கள் உருவாக்கி பரப்பி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை பழிவாங்கும் வகையில் இதுபோன்ற பொய்ச் செய்திகள் சித்தரிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.



from India News https://ift.tt/4qiGZXe

Post a Comment

0 Comments