"2 மதங்களைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள்; பெண்ணினத்திற்கே பெருமை" - தமிழிசை செளந்தரராஜன்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மனதை உலுக்கியிருந்தது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங்
இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறையின் சார்பாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங், என இரண்டு பெண் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து இந்தப் பெண் இரணுவ அதிகாரிகளுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவ்வகையில் தமிழ்நாடு 'பாஜக'வின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், "நன்றி பிரதமர் அவர்களே...காப்பாற்றப்பட்டது "தாய்"நாடு... தாக்குதலுக்கு பெயர் 'செந்தூர்'ஆபரேஷன்' பெண்களை கதற விட்ட தீவிரவாதிகளுக்கு 'பெண்களின்' நெற்றி பொட்டை வைத்தே பெயர்.......

பாகிஸ்தானை பொட்டில் அறைந்த இந்த தாக்குதலை உலகிற்கு அறிவித்தது இரண்டு பெண் வீர அதிகாரிகள்....... கர்னல் சோபியா குரேஷி.. விங் கமாண்டர் வியாமிகா சிங். மதத்தைக் கேட்டு ஆண்களைக் கொன்ற தீவிரவாதிகளை நாம் கொன்றதை... உலகிற்கு அறிவித்தது..

இரண்டு மதத்தை சேர்த்த.. இரண்டு மதத்தை சேர்ந்த.. பெண் ராணுவ அதிகாரிகள் பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்ததற்கு புலியை முறத்தால் அடித்த.. வீர தமிழ் மண்ணைச் சேர்ந்த ஒட்டுமொத்த வீரபெண்ணினத்தின் வாழ்த்துகள்...." என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பெருமிதப்பட்டுள்ளார்.



from India News https://ift.tt/Agi7c5q

Post a Comment

0 Comments