Trump: `பாகிஸ்தானுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன், அதனால்..' -காஷ்மீர் தாக்குதல் குறித்து டிரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புகைப்படம்
காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புகைப்படம்

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்.

பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக இருக்கிறேன். எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. இரு தரப்பினரும் இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/QWA597V

Post a Comment

0 Comments