'அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதித்து வருகிறது. உதாரணத்திற்கு, இந்தியா அமெரிக்கா மீது 100 சதவிகித வரி விதிக்கிறது.
இதனால், இனி அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் அதிக வரி விதிக்கின்றதோ, அந்த நாட்டின் மீது அதே வரியை அமெரிக்கா விதிக்கும்" என்று தனது 'பரஸ்பர வரி கொள்கை' குறித்து தான் பதவியேற்ற சில நாள்களில் அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
'இந்தப் பரஸ்பர வரி ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அது அமெரிக்காவின் விடுதலை நாள்' என்று குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப்.

அவர் கூறிய பரஸ்பர நிதி நாள், அமெரிக்காவின் விடுதலை நாள் இன்று.
இன்றிலிருந்து இந்திய உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு பரஸ்பர முறையில் வரி விதிக்கப்படும்.
இதனால், அமெரிக்காவிற்கு என்ன நன்மை?
'பிற நாடுகள் அமெரிக்காவின் மீது விதிக்கும் அதிக வரியால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கின்றது. நாமும் பரஸ்பர வரி விதிக்கும் போது, பிற நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளை குறைத்து கொள்ளும்' என்பது ட்ரம்ப்பின் கூற்று.

இதுவும் ஓரளவு உண்மை தான். இந்தியாவையே எடுத்து கொள்வோம். ட்ரம்ப்பின் நாள் குறிக்காத பரஸ்பர வரி அதிரடி அறிவிப்பிற்கு பின், கடந்த மத்திய பட்ஜெட்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் போன்ற பொருள்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்பட்டது.
இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் தங்களது இறக்குமதி வரிகளை குறைத்தால் நிச்சயம் அமெரிக்காவிற்கு பெரிய லாபம்.
இந்த நிலையில், 'புதிய குண்டாக' ட்ரம்ப் வரி விகித உயர்வு அனைத்து நாடுகளுக்குமே இருக்கும்.
இந்த அறிவிப்பால் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை ஏற்கெனவே வரி விதிப்பை குறைத்து வருகிறது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரம்ப் பேசியிருந்தார்.
பிற நாடுகளின் நிலை?
இதற்கு சிறந்த உதாரணம் நேற்றைய இந்திய பங்குச்சந்தை. நேற்று, சந்தை இறக்கத்தில் தொடங்கி இயக்கத்திலேயே முடிந்தது. இதற்கு பரஸ்பர வரி முக்கிய காரணி ஆகும்.
இப்படி பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பாதித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடுகளை தங்கம் பக்கம் மாற்றுகிறார்கள். இதன் விளைவாக, தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்காவில் வரி அதிகப்படுத்தும்போது, அந்தப் பொருள்களின் விலை அந்த நாட்டில் உயரும்.
அதனால், அந்தப் பொருள்களை வாங்குவதை அமெரிக்க மக்கள் குறைத்து அல்லது நிறுத்தி வேறு பொருள்களை தேடிச் செல்வார்கள்.
இதனால், பிற நாட்டு நிறுவனம் மட்டும் பாதிப்படையாமல், பிற நாட்டு பொருளாதாரமும் பாதிப்படையும்.
உலக பொருளாதாரம் பாதிப்படையும் போது, அதன் எதிரொலி இப்போது இல்லையென்றாலும், சில நாள்களில் அமெரிக்காவிலும் இருக்கும். 'தன் வினை தன்னை சுடும்' என்பதுப்போல, தான் விரித்த வலையில் ட்ரம்ப்பே சிக்கக்கூடும்.
இந்திய நேரப்படி இன்று இரவு பரஸ்பர வரி குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அதையடுத்து நிச்சயம் பெரிய பெரிய மாற்றங்கள் உலக பொருளாதாரத்தில் நடக்கும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/E4MGYic
0 Comments