புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்வில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம் கலந்துகொண்டு பேசுகையில்,
அதிமுக - பாஜக கூட்டணி
"அதிமுக - பாஜக கூட்டணி என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக இயற்கையாக அமைந்த கூட்டணி. வருகின்ற 2026 -ல் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி வெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
ஏழு கோடி தமிழர்களின் நன்மைக்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும்.
அ.தி.மு.க 5 முறை ஆட்சியில் இருந்த கட்சி. அதே போல், பா.ஜ.க 3 முறையாக மத்தியில் ஆளுகின்ற ஒரு மாபெரும் கட்சி. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்பது தி.மு.க-வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு புரளிகளை கிளப்பி விட்டு இந்தக் கூட்டணி உடைக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக சென்று தி.மு.க-வினர் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்கள்.
தேர்தல் வருவதற்கு முன்பாக தி.மு.க-விலிருந்து எத்தனைக் கட்சிகள் உடைந்து வெளியேறும் என்று பார்க்கத்தான் போகிறோம்.
அமைச்சர் பொன்முடி பேச்சு
தி.மு.க-வினர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் படுக்க வெச்சா, நிக்க வச்சா வாய் தவறி பேசவில்லை. வன்மத்தோடு தான் பேசி வருகிறார்கள். அவர்கள் திராவிட தீவிரவாதியாக உள்ளனர்.
அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக, அவரது தொகுதியான திருக்கோவிலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
தி.மு.க-வின் கடைசி பத்தாண்டு கால ஆட்சி எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிவிட்டு செல்லட்டும். அதன் பிறகு, திகாரா, புழலா என்று நீதிமன்றங்கள் முடிவு செய்யும்.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி 450 நாள்கள் சிறையில் இருந்தார். டாஸ்மாக் ஊழலில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. மீண்டும் அவர் ரெக்கார்டை அவரே பிரேக் செய்யும் வகையில் அதிக நாட்கள் சிறையில் இருப்பார்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/cJKbwUk
0 Comments