'திமுக இப்படி ஏமாத்துவாங்கனு தெரியாம போயிருச்சே!'- மகளிர் தினத்தில் விஜய்யின் நேரடி அட்டாக்!

மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மகளிர் பாதுகாப்புப் பற்றி பேசும் விஜய், திமுக அரசையும் நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

tvk vijay

விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, 'எல்லாருக்கும் வணக்கம். இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுக்க இருக்கும் என்னுடை அம்மா, அக்கா, தங்கை, தோழி அத்தனை பேருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சந்தோஷம்தானே...பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷத்தை உணர முடியும்? இப்படி எந்த பாதுகாப்பு இல்லாமல் அச்ச உணர்வோடு இருக்கும்போது எந்த சந்தோஷமும் இருக்காதுதானே? அப்படினு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. என்ன செய்ய?

நீங்க நாம எல்லாம் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா, அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்பதானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியதுதான். கவலைப்படாதீர்கள். 2026 இல் நாம் எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்ற வேண்டும். அதற்காக இந்த மகளிர் தினத்தின் உறுதியேற்போம்.
TVK Vijay

எந்த சூழ்நிலையிலுல் ஒரு தம்பியாக, அண்ணனாக, மகனாக, தோழனாக உங்களுடன் நிற்பேன். நன்றி.' எனக்

கூறியிருக்கிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்து இப்போது வரைக்கும் எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சித்ததே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக திமுக என குறிப்பிட்டு வெளிப்படையாக அட்டாக் செய்திருக்கிறார். அதுபோக இன்றைக்கும் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மா.செக்களுக்கு உத்தரவும் இட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/7ImfXRk

Post a Comment

0 Comments