``புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..'' - அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும்போது, "சிறுபான்மையினருக்கு வழங்கக்கூடிய சலுகைகளை பறிப்பதும், மத கோட்பாடுகளில் உள்ள சட்ட திட்டங்களை அழிக்கின்ற நடவடிக்கையிலும் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் பெரியகருப்பன்

சி ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களை போராடி தடுத்து நிறுத்திய இயக்கம்தான் திமுக. ஆனால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜகவின் தீர்மானத்தை ஆதரித்தனர்.

இன்று அதிமுகவினர் கபட வேடமிட்டு நாங்கள்தான் சிறுபான்மையினரை காக்கக்கூடிய சக்தி என்பது போல பேசுவதுதான் நகைப்புக்குரியது.

அமைச்சர் பெரியகருப்பன்

திமுக தொடங்கப்பட்டபோது அரசியலில் ஈடுபடக்கூடிய இயக்கமாக தொடங்கப்படவில்லை. தமிழர்கள் தன்மான உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும், தமிழர்கள் யாருக்கும் அடிமைபட்டவர்கள் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக சமுதாய சீர்திருத்த இயக்கமாக தொடங்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு பின்னர்தான் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. ஆனால், இன்று, புதிதாக ஆரம்பிக்கப்படும் இயக்கங்கள் கட்சியின் பெயர், கொடியை அறிவிப்பதற்கு முன்பாக, பிறந்த குழந்தை பட்டப்படிப்பு முடித்தது போல தாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் அனைவருமம் கேலிப் பொருளாகத்தான் பார்க்கின்றனர்" என்றார்.

"நேரடியாக பேச முடியாமல் எங்கள் தலைவர் விஜய்யை மனதில் வைத்து அமைச்சர் பேசியதன் மூலம் அவர் ஆளுங்கட்சிக்கு தொடர்ந்து எரிச்சலை உண்டாக்குகிறார் என்பது தெரிகிறது" என்கின்றனர் த.வெ.க-வினர்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from India News https://ift.tt/lwQgqiS

Post a Comment

0 Comments