Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும்

அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.' என அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் செய்திருந்தார். எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை போன்ற அதிமுகவின் மூத்தத் தலைவர்களும் எடப்பாடியுடன் இருந்தனர். 'நான் எந்த முக்கிய நபரையும் சந்திக்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன்.' என காலையில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

அதேநேரத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து, '2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.' என ட்வீட் வந்திருக்கிறது.

டெல்லியில் நடந்திருக்கும் இந்த முக்கிய நகர்வின் மூலம் 2026 க்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.



from India News https://ift.tt/buvkTXg

Post a Comment

0 Comments