தமிழ்நாடு சத்துணவு மையங்களில் 3,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி, 8,000 பேரை பணியமர்த்துவது குறித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையால் அதிருப்தியடைந்த சத்துணவு ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் தழுவிய இந்த உண்ணாவிரதப் போராட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் விவிடி சிக்னலுக்கு அருகிலுள்ள சிதம்பர நகர் மைவாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

3,000 ரூபாய் தொகுப்பூதியத்தோடு சத்துணவு ஊழியர்களை பணியமர்த்துவது தொடர்பான அரசாணைக்குத் தடை விதிக்க கோரிய சத்துணவு சங்க ஊழியர்கள், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வலியுறுத்தினர். மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ. 6750ஆக உயர்த்தி வழங்கவும் கோரினர். அரசின் அத்தனை துறையிலுள்ள காலி பணியிடங்களிலும் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை தந்து காலமுறையில் ஊதியத்தை உயர்த்தவும், பதவி உயர்வு வழங்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மைய ஊழியர்கள், அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரான ஜெயலட்சுமி, ``சத்துணவு ஊழியர்களுக்கா பணியில் அறுபதாயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அரசு வெறும் எட்டாயிரம் காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்ப முன்வந்துள்ளது, கவலைக்குரியது. எனவே, அரசு காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பி, வேலையில்லாமல் தவிப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.
from India News https://ift.tt/Aiy1NSP
0 Comments