Tvk Vijay: `அண்ணனாகவும், அரணாகவும் உறுதியாக நிற்பேன்' - பெண்களுக்கு கடிதம் எழுதிய விஜய்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அதிமுக, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் நடந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,``தமிழகத்தில் தாய்மார்கள் என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள் பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லென வேதனைக்கும் ஆளாகிறேன்.

விஜய்

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழ்நிலையிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/J2RtemN

Post a Comment

0 Comments