TVK Vijay: `சுயமரியாதைச் சுடர்; எங்கள் கொள்கைத் தலைவர்’ - பெரியாரின் 51வது நினைவு நாளில் விஜய்

தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பல்வேறு தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இன்று வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். இதையடுத்து பெரியாரை தனது கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள த.வெ.க விஜய் தந்தை பெரியாரின் நினைவு தினம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்." என்று பதிவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/yFvkBJR

Post a Comment

0 Comments