திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.ஆர்.பி ராஜா பேசும்போது, “அரசியலுக்கு புதிதாக ஒரு சர்கஸ் கம்பெனி வந்துள்ளது. அந்த சர்கஸ் கூடாரத்துக்கு ஈடு கொடுப்பதற்காக பழைய சர்கஸ் கம்பெனியைச் சேர்ந்த கோமாளிகள் புதிய வேடங்களை போடுகிறார்கள்.
அவர்களை அவர்களே கலாய்த்து கொள்கிறார்கள். அதனால் அவர்களை கலாய்ப்பதற்கு கூட மனம் வரவில்லை. 6 சவுக்கடிகள் என்பது என்ன என்று புரியவில்லை. ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்பவர்கள் 108 திவ்ய தேசங்கள் தொடங்கி காசி வரை சென்று அங்கெல்லாம் சவுக்கடி கொடுத்துக் கொள்ளட்டும்.
ஆனால் அண்ணாமலை இங்கே இருந்தால்தான் எங்களுக்கு கன்டென்ட் கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரியாணி செய்துவிட்டார். அதில் நான் தம் மட்டும் தான் கொடுத்தேன்.” என்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பி ராஜா, “சாட்டையடி போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளது.
பொது வாழ்வில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாது. முதல்வருக்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.” என்றார்.
from India News https://ift.tt/HijecpY
0 Comments