மும்பை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காக கப்பல் சவாரி கொண்டுவரப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்படியான கப்பல் சவாரியைச் சென்னையிலும் கொண்டுவருவது என்பது நீண்டநாள் திட்டமாக இருந்து வந்தது.
இதற்காக, சென்னை, ஈ.சி.ஆரில் இருக்கும் முட்டுக்காடு பகுதியில் சுற்றுலாத்துறை சார்ப்பில் இயங்கி வரும் போட் ஹவுஸில், புதிதாக 'Seanz Cruise' என்ற கப்பல் சவாரியை ஆரம்பிக்கவுள்ளது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. ஏற்கெனவே அங்கு படகு சவாரிக்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கேயே இந்தக் கப்பல் சவாரியும் இயக்கப்படவுள்ளது. இந்த 'Seanz Cruise' கப்பலில் 100 பேர் வரை பயணிக்கும் வகையில் பெரிய கப்பலாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கப்பலின் உள்ளே உணவகம், பார்ட்டி ஹால், DJ கொண்டாட்டம், ஓய்வறைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கப்பலின் மேலே நின்று கடலின் காட்சியைக் கண்டு ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் நேற்று (நவம்பர் 21) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதனை நேரில் ஆய்வு செய்தனர். கேரளா பாணியில் இந்தக் கப்பலை இயக்குவதுதான் சுற்றுலாத் துறையின் நோக்கமாக இருக்கிறது.










ஆனால், இந்த விலை சற்று கூடுதலாக இருப்பதால் விலையைச் சரியாக நிர்ணயிப்பதற்குப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இது சுற்றுலாத் துறைக்கும் சவலான விஷயமாகவே இருந்து வருகிறது. இந்தக் கப்பல் சவாரி சுற்றுலாவை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
புதிதாக ஆரம்பமாகவுள்ள இந்த 'Seanz Cruise' கப்பல் சவாரிக்கு ஒரு நபருக்கு எவ்வளவு விலை நிர்ணயித்தால் சரியாக இருக்கும் என்பதை கமெண்டில் தெரிக்கவும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook
from India News https://ift.tt/SVb1xh4
0 Comments