"விஜய் அரசியல் வருகையால், சீமானுக்கு அச்சம்..!" - சொல்கிறார் மாணிக்கம் தாக்கூர் எம்.பி

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு மொழி பேசுபவர்களை பற்றி நடிகை கஸ்தூரி கூறியது வன்மையான கண்டனத்திற்குரியது. இதைப்போல அர்ப்பத்தனமான பேச்சுக்களும், அருவருப்பான பேச்சுக்களும் தமிழ் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தமிழகமென்பது அனைவரையும் அரவணைக்கும் மண்ணாக இருக்கிறது. ஒவ்வொரு மக்களின் தாய்மொழியையும் போற்றுகிற மண்ணாக உள்ளது. நடிகை கஸ்தூரி போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தத்தை உள்வாங்கியவராக உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் சொல்ல வேண்டியதை நடிகை கஸ்தூரி சொல்லியிருக்கிறார். இதைவெறுப்பு அரசியலின் மையமாக பார்க்க வேண்டும்.

மாணிக்கம் தாக்கூர்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொருத்தமட்டில், அவருக்கு இழப்பு என்பது நேரடியாக தெரிகிறது. அவர் கூடவே உள்ள தம்பிமார்கள் அவரை விட்டு சென்று விட்டார்கள் என்ற கவலை வந்திருக்கலாம். அல்லது அவருடைய அரசியலென்பது அவரின் கட்சிக்கு ஒருமுறை மட்டுமே வாக்களிக்கக்கூடிய தலைமுறையை கொண்டிருக்கிறோமோ என்ற பயம் வந்திருக்கலாம். இந்தநிலையிலே நடிகர் விஜய் அரசியல் வருகையும், அவருடைய பேச்சும் சீமானின் கட்சி கூடாரத்தை காலி செய்து விடுமோ என்ற பயம் வந்திருக்கலாம். இதுஅவரின் பயமா இல்லை? கவலையா? என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்". என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டுமென கேட்டு காங்கிரஸ் உறுப்பினர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை செயற்குழு கூடி முடிவு செய்யும். இந்தியாவின் மிகமுக்கியமான கட்சி காங்கிரஸ். இந்தியா கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி பலமாக இயங்கிவருகிறது. இந்தியா கூட்டணியின் வலிமையால் மத்தியில் தனிப்பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மாநிலங்களில் இந்தியா கூட்டணி பிஜேபி கட்சிக்கு எதிரான பலமான கூட்டணியாக செயலாற்றி வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற விஷயத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கலந்து பேசி முடிவு செய்வோமே தவிர பொதுவெளியில் இது பற்றிய பேசுவது நியாயமாக இருக்காது. வயநாட்டில் பிரியங்கா காந்தியின் வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். குறைந்தபட்சம் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார். பிரியங்கா காந்தியின் வருகை பா.ஜ.க.வுக்கு எதிராகவும், வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் இருக்கும். வறிய நிலை மக்களுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அவரின் வருகை இருக்கும். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதுதான் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களின் பாணியாக இருக்கும். அந்தவகையில் நடிகர் விஜய்யும், ஆளுங்கட்சியை விமர்சித்து வருகிறார். ஆனால் அவரின் பேச்சை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

மாணிக்கம் தாக்கூர்

திராவிடத்தின் கொள்கைக்கும், நடிகர் விஜய் கட்சியின் கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாத ஆளாக ஹெச்.ராஜா இருக்கிறார். அவரை பொருத்தமட்டில் யாரெல்லாம் தமிழைப் பற்றி பேசுகிறார்களோ. திராவிடத்தை பற்றி பேசுகிறார்களோ அவர்கள் எல்லோரும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் பிரச்சனை பல வடிவங்களில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிரச்னையும் தமிழர்களின் பிரச்னையையும் பா.ஜ.க பேசியதில்லை. பா.ஜ.க தமிழ் மண்ணுக்கு எதிரானதென்று தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி மிக பலமான கூட்டணி. இளம் தலைவர் ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நெருங்கிய நட்பாக உள்ளனர். தி.மு.க- காங்கிரஸ் உறவு சகோதரர்களுக்கான உறவுபோல உள்ளது. இந்த கூட்டணி உறவு, மிக நீண்டகால உறவு. ஆகவே இதில் எந்த ஒரு விரிசலுக்கான இடமும் இல்லை" என கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/phmJUfb

Post a Comment

0 Comments