விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளி முகேஷ். இவர் அப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், குன்னூர் கிராம ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகளுக்கு எதிராக முகேஷ் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பணி

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வத்திராயிருப்பு அருகே குன்னூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 78 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுகிய இடத்தில் இயங்கிவரும் இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணி ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் புதிய வகுப்பறை கட்டும் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டினால் மாணவ- மாணவிகள் சத்துணவுக் கூடத்திற்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்தைச் சந்திப்பர். ஆகவே யாருக்கும் பாதகமில்லாமல், பள்ளியின் அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தின் மேற்பகுதியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவேண்டும் என வலியுறுத்தி பள்ளியின் நுழைவாயில் முன்பு முகேஷ் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை

இவரைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் முகேஷுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் போராட்டம் நீடித்த நிலையில் குன்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் முன்னிலையில் உறுதி அளித்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மாற்றுத்திறனாளி முகேஷ் தனியொரு ஆளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்து போராட்டத்திற்கு ஆதரவாகக் கலந்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/Fxr2wn5

Post a Comment

0 Comments