பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்.
ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள், இவர்கள் மட்டுமே தமிழ் பற்றாளர்கள், பாஜகவைச் சார்ந்தவர்கள், மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்கிறார்.
சமூக வலைதளங்களில் என்னை இந்திஇசை என பதிவிடுகிறார்கள். ஆனால் தமிழ் என்பது என் பெயரில் மட்டுமில்லை, உயிரிலும் இருக்கிறது. திமுக அமைச்சர்களின் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவினர் நடத்தக்கூடிய எல்லா பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது., தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபடுவதில் எனக்கும் உடன்பாடில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக, சரியாக, உணர்வுபூர்வமாக பாடப்பட வேண்டும். அதை வைத்து ஒரு பூதாகரமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பவன் கல்யாண் கூறியது உதயநிதியின் மனதில் தைத்து விட்டது என நினைக்கிறேன்.
தவறுகளை திருத்திக் கொண்டு உதயநிதி கிரிவலம் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. பவன் கல்யாண் கூறியதை இவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். பயந்துவிட்டார்கள் என கூற மாட்டேன். பயபக்தியோடு இருக்க வேண்டும்.” என்றார்.
from India News https://ift.tt/o4uIMjD
0 Comments