``தமிழக அரசு, செலவு கணக்கினை வழங்காதவரை, தம்படி காசு கூட கிடைக்காது" - ஹெச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த ஹெச்.ராஜா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது.  இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஹெச்.ராஜா

எல்லா குற்றங்களுக்கும் பின்னணியில் போதைப் பொருள்களின் பயன்பாடு உள்ளது. தமிழக முதல்வர் ராஜினாமா செய்வதே சிறந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்ததன் மூலம் காவல்துறையினர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைத்துமே காவல்துறையின் கண்டு துடைப்பு வேலைகள்தான். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றவரிடம்,

'மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது' குறித்த கேள்விக்கு, "சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.500 கோடியை செலவு செய்த கணக்கினை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. அதை வழங்காத வரை தமிழகத்திற்கு தம்படி காசைக் கூட மத்திய அரசு வழங்காது. அது குறித்து கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் நிதி ஆயோக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்லவில்லை..." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/Kt2cVmQ

Post a Comment

0 Comments